கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின் அட்டூழியம்
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையின் பின்னணியில், உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் சந்தித்த அநீதி குறித்து பதிவு.

சுங்கச்சாவடி பிரச்சினையின் பின்னணி
சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் - செங்கம் கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின் அட்டூழியம்!
முக்கிய கோரிக்கை
20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது.
நிகழ்வு விவரம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் கடந்த 29.11.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் சட்ட விரோதமாக மண் திருடப்பட்டுள்ளதை ஆய்வு செய்துவிட்டு திரும்பி வந்தனர்.
அப்போது கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியரான பவுன் குமார் என்பவர் வாகனத்தை மறித்து, வெளிப்புற வழியில் செல்லக்கூடாது; சுங்கம் கட்டிவிட்டு தான் செல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாகனத்தை வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், “சுங்கச்சாவடி கட்டும் போது என்ன செய்தீர்கள்? அப்போது தடுத்து நிறுத்த வேண்டியது தானே?” என்று ஆணவத்தோடு பேசியுள்ளார்.
அதன் பின்னர் வாகனம் சுங்கச்சாவடியை கடந்த பிறகு வண்டியின் பதிவு எண்ணை வைத்து சுங்க கட்டணத்தை எடுத்துள்ளார். இத்தகைய செயலை உழவர் உரிமை இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
அதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் சுங்கச்சாவடி ஊழியரை கண்டித்து கேள்வி எழுப்ப உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரண்டனர். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வெளிப்புற வழியில் வாகனங்களை திருப்பி விடப்பட்டு, அட்டூழியம் செய்த ஊழியர் பவுன்குமார் வந்து உரிய பதில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.
பின்னர் பவுன் குமார் என்ற ஊழியர் வந்து இனி இந்த தவறு நடக்காது என்று மன்னிப்பு கேட்ட பிறகு, உழவர் உரிமை இயக்கத்தைச் சார்ந்தவர்களே தடுப்புகளை எடுத்து வைத்து வாகனங்களுக்கு வழி விட்டனர்.
தமிழ் தெரிந்த ஊழியர்கள் பணியமர்த்த வேண்டும்
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் தமிழ் மொழி பேசத் தெரியாத நபர்கள் பணியில் இருப்பது உள்ளூர் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்று உழவர் உரிமை இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
உழவர் உரிமை இயக்கத்தின் நிலைப்பாடு
உழவர் உரிமை இயக்கம் தொடர்ச்சியாக கரியமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து போராடி வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடந்து கொள்வது ஆணவத்தின் உச்சம்.
உடனடியாக ஏற்கெனவே கொடுத்த பட்டியலில் உள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உழவர் உரிமை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
இறுதியாக, தமிழ் மொழி பேசத் தெரியாத ஒருவரும் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கையை உழவர் உரிமை இயக்கம் வைக்கிறது.
உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!

சுங்கச்சாவடி
test
